கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் ; 3 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1397
3 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க, காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு வழக்கில் 8 பேருக்கு எதிராக வழக்குப் பதிந்து நீலகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீலகிரி நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவில், மேலும் சிலரை விசாரிக்க வேண்டும் என்றும், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசி ஆகியோருக்குத் தான் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாகச் சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments