பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தலிபான்கள் கைப்பற்றவில்லை என போராளி குழு அறிவித்துள்ளதாக தகவல்

0 1871

பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தலிபான்கள் கைப்பற்றவில்லை என்று அங்குள்ள போராளி குழு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மட்டும் உள்ளூர் போராளி குழுவின் வசம் உள்ளது. இதனால் அந்த பகுதியை கைப்பற்ற நடந்த மோதலில் 34 பேர் கொல்லப்பட்டதாகவும், வெற்றிகரமாக பஞ்ஷிரை கைப்பற்றி விட்டதாகவும் தலிபான்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால் இதனை போராளி குழு மறுத்துள்ளதாக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருதரப்பு மோதலில் உயிரிழந்த தலிபான் அமைப்பை சேர்ந்த 10 பேரின் உடல்கள் அந்த பகுதியில் கிடந்ததாகவும், குறைந்தது 350 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் போராளி குழுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் சகாப்தத்தை சேர்ந்த ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் போராளி குழுவிடம் இருந்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments