பள்ளி வாகனங்களை சர்வீஸ் செய்து தருவதாகக் கூறி வாகனத்தின் நிறத்தை மாற்றி விற்பனை

0 1960
பள்ளி வாகனங்களை சர்வீஸ் செய்து தருவதாகக் கூறி வாகனத்தின் நிறத்தை மாற்றி விற்பனை

கோயம்புத்தூரில் பள்ளி நிர்வாகியிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது பள்ளி வாகனங்களை சர்வீஸ் செய்து தருவதாக வாங்கி, அவற்றின் நிறத்தை மாற்றி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வந்த அருள் என்பவரிடம் கோவையைச் சேர்ந்த அவரது நண்பர் யூசுப் அலி என்பவர் 6 லட்ச ரூபாய் கடனாக வாங்கினார் என்று கூறப்படுகிறது. கடந்த மே மாதம் உடல்நலம் குன்றி அருள் உயிரிழந்த நிலையில், அவரது மகன் வினோத் யூசுப் அலியிடம் பணத்தைக் கேட்டுள்ளார்.

பணத்துக்குப் பதிலாக பள்ளிக்குச் சொந்தமான 3 வாகனங்களையும் சர்வீஸ் செய்து தருகிறேன் எனக் கூறி வாங்கிய யூசுப் அலி, கூட்டாளி சாம்பால் என்பவனுடன் சேர்ந்து வாகனத்தை மஞ்சள் நிறத்திலிருந்து வெண்மை நிறத்துக்கு மாற்றி, அந்தோணி மைக்கேல் சேவியர் என்பவனிடம் 10 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

3 வாரங்கள் கடந்தும் யூசுப் அலி முறையாக பதிலளிக்காததால் வினோத் போலீசில் புகாரளித்தார். சாம் பாலையும், அந்தோணி மைக்கேல் சேவியரையும் கைது செய்த போலீசார், யூசுப் அலியைத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments