நள்ளிரவில் வீட்டில் இருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்

0 1579
நள்ளிரவில் வீட்டில் இருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர், கார்களுக்கு சீட் லைனிங் செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1ம் தேதி, அவருடைய வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், சத்தம் கேட்டு வெளியில் வந்த அசோக்குமார், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தார்.

பின்னர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி ஓடுவது தெரிய வந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments