அரசுப் பேருந்து மோதி பலியானவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 3 அரசு பேருந்துகள் ஜப்தி

0 3050
விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 3 அரசு பேருந்துகள் ஜப்தி

விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

கடந்த 2011ம் ஆண்டு உளுந்தூர்பேட்டையில், விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து மோதி ராமு என்பவர் பலியானார். பாதிக்கப்பட்ட ராமுவின் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதுவரை உரிய இழப்பீடு வழங்காததால், வட்டியுடன் சேர்த்து 31 லட்சம் ரூபாய் வழங்க விழுப்புரம் கோட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால், கடந்த 26ம் தேதி விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 3 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments