அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐஎஸ் தீவிரவாதி

0 1790
அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐஎஸ் தீவிரவாதி

சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் இருந்தபோது பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பிரிட்டனில் பிறந்த தீவிரவாதி அமெரிக்க நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

லண்டனில் பிறந்த Alexanda Kotey, 4 பேர் கொண்ட The Beatles என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்தின் அங்கமாக ஈராக்கில் செயல்பட்டான். ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்கர்களின் தலையை துண்டித்து கொலை செய்தது உட்பட பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தால் அங்கு கைது செய்யப்பட்டு, அலெக்ஸாண்டா கொடேய் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டான்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் பிரிட்டன் அரசு அவனது குடியுரிமையை ரத்து செய்தது. அவன் மீதான விசாரணை விர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments