சென்னை புறநகரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை - அமைச்சர்

0 1293

உடற்பயிற்சி, சைக்கிளிங் செய்து இளைஞர்களை முதலமைச்சர் உற்சாகப்படுத்துவதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பேரவையில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எஸ் ஆர் ராஜா, புறநகர்ப்பகுதியில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் போன்ற வசதிகள் இல்லை என்பதால், அங்குள்ள இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மைதானம் அமைக்க ஏதுவான நிலம் கண்டறியப்பட்டு கொடுக்கப்பட்டால், தரமான மைதானம் அமைக்கப்படும் எனவும், சென்னை புறநகர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments