நெய்வேலியில் பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்குக் கொரோனா

0 13205

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும் அரியலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments