அரியலூரில் தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3107
அரியலூரில் தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, வரதராஜன் பேட்டையிலுள்ள புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments