கனமழைக்கு அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து... மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

0 1436

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

தா.பழூர் கடைவீதி அருகில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் நேற்று பெய்த கனமழையில் திடீரென சரிந்து விழுந்தது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சுற்றுச்சுவர் அருகில் கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கியதே சுவர் இடிந்து விழக் காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், வடிகால் வசதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments