வயலில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த 2 விவசாயிகள் இடி தாக்கி உயிரிழப்பு

0 1977

கடலூரில் வயலில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.

கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், சிதம்பரம் அருகே முகையூர் கிராமத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் வயலில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென இடி தாக்கியதில் பாலதண்டாயுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோன்று, புவனகிரி அருகே பிரசன்னராமாபுரம் கிராமத்தில் வயலில் உழவுப் பணி மேற்கொண்டிருந்த கலைச்செல்வன் என்பவரும் தலையில் இடி விழுந்து உயிரிழந்தார்.

மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த கலைச்செல்வன் இடி தாக்கி பலியாகினார். இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments