தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை... அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

0 2463

நீலகிரியில் தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கு சாவகாசமாக நடமாடிக் கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தை, கதவு திறந்திருந்ததை கண்டு உள்ளே புகுந்தது. சிறிது நேரம் வாசலிலேயே நின்று நோட்டமிட்ட சிறுத்தை ஆள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்து, உள்ளே வந்தது. பின்னர், சமையலறை வரை சென்று சுற்றிப்பார்த்த சிறுத்தை விடுதியில் இருந்து வெளியேறியது.

விடுதியில் ஆள் யாரும் இல்லாத நிலையில், சிறுத்தை வந்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments