ஆப்கானிஸ்தானிலும் ஈரானைப் போல் அரசுக்கும் மத விவகாரங்களுக்கும் ஒரே உயர் தலைவரை நியமிக்க வாய்ப்பு

0 2313

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது குறித்துத் தாலிபான்கள் இன்று அறிவிக்க உள்ள நிலையில், ஈரானில் உள்ளதைப்போல் அரசுக்கும் மத விவகாரங்களுக்கும் உயர் தலைவர் ஒருவரை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பிற்பகல் தொழுகை முடிந்த பின் புதிய அரசு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஹைபதுல்லா அகுண்ட்சாதாவை உயர் தலைவராகவும், ஆளுகைக் குழுவின் தலைவராகவும் நியமிக்கக் கூடும் என்றும், முல்லா அப்துல் கனி பரதர் அரசின் அன்றாடச் செயல்களைப் பொறுப்பாகக் கவனிப்பார் என்றும் தாலிபான் பண்பாட்டுப் பிரிவு உறுப்பினர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.

ஈரானில் அதிபருக்கு மேலான பதவியில் உயர் தலைவர் உள்ளார். அவர் ராணுவத் தலைவர், அரசு தலைவர், நீதித்துறைத் தலைவர்களையும் நியமிக்கிறார். நாட்டின் அரசு, மதம், ராணுவ விவகாரங்களில் உயர் தலைவரின் சொல்லே இறுதியாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments