வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் - முதலமைச்சர்

0 2255

கப்பல் சார்ந்த துறையில் சிறப்பாகப் பணியாற்றும் தமிழர் ஒருவருக்கு 5 இலட்ச ரூபாய் பணப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய உறுப்பினர் ஈஸ்வரன், வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி. பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனச் சுதந்திர நாள் விழாவில் அறிவித்ததை நினைவுகூர்ந்தார்.


கோவை வ.உ.சி பூங்காவில் அவரது முழு உருவச் சிலை வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி இடம்பெற்ற பேருந்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments