இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 45,352 பேருக்கு கொரோனா

0 2261

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பாதிப்பால் ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்தனர். நாட்டில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 99 ஆயிரத்து 778 ஆக உள்ளது. நாட்டின் புதிய தொற்று எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாகக் கேரளத்தின் பங்கு உள்ளது.

கேரளத்தில் நேற்று ஒருநாளில் 32 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 188 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் ஏற்பட்ட உயிரிழப்பில் பாதிக்கு மேல் கேரளத்தில் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments