திருமணத்திற்கு அழைப்பு விடுக்காததாகக் கூறி வாக்குவாதம் செய்த நண்பனை, சக நண்பர்கள் கொலை

0 3107

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணத்திற்கு அழைப்பு விடுக்காததாகக் கூறி வாக்குவாதம் செய்த நபரை சக நண்பர்கள் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை ஆலங்குடியைச் சேர்ந்த விஜய்கும், அவரது நண்பர் சசிதரனுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும், அன்றிரவே சசிதரன் பத்திற்கும் மேற்பட்ட  நண்பர்களுடன் சேர்ந்து விஜயை வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சசிதரன் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் சசிதரனின் திருமணத்திற்கு விஜயை அழைக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதும், அதை தொடர்ந்து விஜயை சக நண்பர்களுடன் சேர்ந்து சசிதரன் கொலை செய்தது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments