கேரளாவில் காரில் அதிவேகமாக சென்றதாக அபராதம்... 3 வயது சிறுமியை காரில் வைத்து பூட்டிய போலீசார்

0 4652

திருவனந்தபுரத்தில் காரில் 3 வயது சிறுமியை வைத்து போலீசார் பூட்டியதாக வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெய்யாட்டிங்கராவை சேர்ந்த ஷிபு குமார், அஞ்சனா தம்பதியின் காரை வழிமறித்த போலீசார் அதிவேகமாக சென்றதாக 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அதிவேகமாக செல்லும் மற்ற கார்களை ஏன் பிடிக்கவில்லை என தம்பதி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், கையில் போதிய பணம் இல்லை என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காரினுள் வைத்து சிறுமியை போலீசார் பூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில் தற்போது தம்பதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments