கோவையில் பேரனை கொலை செய்த தாத்தா... மயங்கி விழுந்து இறந்ததாக நாடகம்

0 3428

கோவையில் பேரனை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு  மயங்கி விழுந்து இறந்ததாக கூறி நாடகமாடிய தாத்தா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் விஜயராகவன். 10ஆம் வகுப்பு வரை படித்த இவர் எந்த வேலைக்கும் செல்லாமலும் மதுவுக்கு அடிமையாகவும் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் வீட்டில் நடந்து வந்தன.

ஆனால் இந்த நடவடிக்கைகளை தாத்தா முருகன் என்பவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பேரனை கட்டிக் கொண்டால் அந்த பெண்ணின் வாழ்வு பாழாகுமே என்ற எண்ணத்தில் கூலிப்படையினரை வைத்து மது போதையில் இருந்த பேரனின் கழுத்தை நெருக்கி கொலை செய்துள்ளார். 

பிரேத பரிசோதனையில் இந்த உண்மை தெரிய வந்ததை அடுத்து முருகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments