போதைப் பொருள் தொடர்பான வழக்கில் நடிகை சார்மி கவுரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை

0 2103

தமிழ், தெலுங்கு இந்திப் படங்களில் நடித்த நடிகை சார்மி கவுரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹைதராபாதில் சுமார் 8 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததாக சார்மி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணா டகுபதி, ரவிதேஜா, ரகுல் பிரீத் சிங், உள்ளிட்ட 10 திரையுலகப் பிரமுகர்கள் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில்,  அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரான சார்மி கவுரிடம்  மாலை வரை விசாரணை நீடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments