கூட்டங்களில் பங்கேற்போர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் - மத்திய அரசு

0 2090

மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நெருக்கமாகக் கூடுகிறவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் ஆகும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. மக்கள் இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் கருதி, அரசியல் கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், கடைவீதிகள், இறைச்சி கடைகள் போன்றவற்றில் அதிகளவில் கூடுகின்றனர். இத்தகைய சூழல் மீண்டும் கொரோனா அலைகளை ஏற்படுத்தும் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூட்டத்தில் இருப்பவர்கள் இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அக்டோபர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி விட்டால் பண்டிகைக் காலத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments