மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை மா.சுப்பிரமணியன் போல வேறு யாரும் செய்ய முடியாது - பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி புகழாரம்

0 2998
மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை மாசு செய்ய முடியாது என புகழாரம்

மக்கள் நல்வாழ்வுத்துறையில் மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை மா.சுப்பிரமணியன் போல வேறு யாரும் செய்ய முடியாது எனவும் பாஜக உறுப்பினர் சரஸ்வதி புகழாரம்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டம் உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் எனவும், மிகக்குறைந்த விலையில் மருந்துகள் இந்த திட்டத்தின் கீழ் கிடைப்பதாக தெரிவித்தார்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருப்பதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை மருத்துவமனைகளை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments