சோதனை சாவடி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய காவலர்கள்..

0 3143
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே எல்லை சோதனை சாவடி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே எல்லை சோதனை சாவடி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

சீதாபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சோதனை சாவடி உள்ளது. கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக வருவதை பார்த்த அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவலர் தினேஷ் உடனடியாக விலகி ஓடியதால் காயமின்றி தப்பினர்.

image

லாரி மோதியதில் சோதனைச் சாவடியின் வெளிப்புற மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. லாரி ஓட்டுனர் வெங்கடேசன் மது அருந்திவிட்டு லாரியை இயக்கியது தெரியவந்ததால் அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments