" யார் ஆட்சியில் தமிழகத்தில் நீட் வந்தது ".... அதிமுக-திமுக-காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதம்

0 2358
யார் ஆட்சியில் தமிழகத்தில் நீட் வந்தது என்பது தொடர்பாக அதிமுக-திமுக-காங்கிரஸ் கட்சிகள் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

யார் ஆட்சியில் தமிழகத்தில் நீட் வந்தது என்பது தொடர்பாக அதிமுக-திமுக-காங்கிரஸ் கட்சிகள் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதாக கூறினார்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு இடையே சிறிது வாக்குவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், அதிமுக உறுப்பினரைப் பார்த்து கேள்வி எழுப்பியதால், அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments