தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா உறுதி

0 2864
தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 1562 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் 1684 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர். பெருந்தொற்றுக்கு மேலும் 20 பேர் பலியாகினர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 478 ஆக உள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 215 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 166 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments