பேருந்து வருவதை அறியாமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் அரசுப் பேருந்து மோதி பலி - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

0 37706
தருமபுரி மாவட்டம் அரூரில் இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்ற 11-ம் வகுப்பு மாணவன், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த விபத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தருமபுரி மாவட்டம் அரூரில் இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்ற 11-ம் வகுப்பு மாணவன், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த விபத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் கன்னியப்பன், பள்ளிக்கு சென்று விட்டு டி.வி.எஸ். EXCELL வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த அவன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றான். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கன்னியப்பன் மீது பலமாக மோதியது.

சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கன்னியப்பன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினான்.

பின்னால் பேருந்து வருவதை பார்க்காமல் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்றதால் விபத்து நடந்ததாக கூறும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்ட தடை இருக்கிறது எனக் கூறும் போலீசார், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments