கனமழை எதிரொலி - அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸியில் அவசர நிலை பிரகடனம்

0 2048
நியூயார்க், நியூஜெர்ஸியில் கன மழை, வெள்ளம் காரணமாக அவசர நிலை பிரகடனம்

இடா சூறாவளியை தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸியில் கனமழை மற்றும் வெள்ளத்தால்அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கன மழையால் நியூயார்க் நகர சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல கார்கள் வெள்ள நீருக்கு இடையே ஆங்காங்கே மிதந்தப்படி இருந்தன.வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் நியூயார்க் மேயர் Bill de Blasio, அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

நியூ ஜெர்ஸியில் ஆங்காங்கே சுழற் காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்தன. கன மழையால் நியூ ஜெர்ஸி ஆளுநர் Phil Murphy-யும் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments