மாரடைப்பால் ஜிம்மில் சுருண்டு விழுந்த இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி

0 8790
மாரடைப்பால் ஜிம்மில் சுருண்டு விழுந்த இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த இளைஞர், மாரடைப்பால் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சி.கே.அச்சிக்கட்டு பகுதியில் செயல்பட்டு வரும் கோல்டன் உடற்பயிற்சி கூடத்தில் இலவசமாக 2 நாட்களுக்கு உடற்பயிற்சியும், நடனப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த சுஜய் சாகர் என்ற அந்த இளைஞருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால், பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியே வந்த சுஜய், படிக்கட்டில் அமர்ந்து தண்ணீர் குடித்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். இருப்பினும், வலி அதிகமாகி படியில் இருந்து மயங்கி விழுந்த சுஜய் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments