சமூக வலைத்தளங்கள், யூடியூப் சேனல்களில் பொய்ச்செய்திகள் பரப்பப்படுகிறது - உச்சநீதிமன்றம் கவலை

0 2909
சமூக வலைத்தளங்கள், யூடியூப் சேனல்களில் பொய்ச்செய்திகள்

சமூக ஊடகங்களிலும், யூடியூபிலும் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்க முடியும் என்றும், அத்தகைய யூடியூப் சேனல்களில் நீதிபதிகள், நிறுவனங்கள், பொதுமக்கள் குறித்துப் பொறுப்பில்லாமல் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகாரமிக்கவர்களுக்கு எதிரான செய்திகள் அவற்றில் வருவதில்லை என்றும் குறிப்பிட்டனர். குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்து வகுப்புக் கண்ணோட்டத்தில் சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களையும், யூடியூப் சேனல்களையும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு இல்லாததால், இத்தகைய போக்கு நீடிப்பதாகத் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments