அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 4761
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனியில் கனமழையும் பெய்யக்கூடும். நாளைய தினமும் நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூரில் கனமழையும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்களுக்கும், அரபிக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments