இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2199
தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், 110 புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், "மக்களை தேடி மருத்துவம் "என்ற திட்டத்தின் மூலம் இந்திய முறை மருத்துவ  மருந்துகளும் வீடு தேடி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்திற்காக 1248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments