பேரவை நடவடிக்கை குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்

0 1957

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களை எங்கு, எப்படி அமர வைக்க வேண்டும், யாரை பேச அனுமதிக்க வேண்டும் ஆகியவை குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது, அவர்களுக்கு தனி இருக்கை வழங்கக் கூடாது, தனியாக பேச நேரம் ஒதுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரவையில் யாரை பேச அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது எனவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர். சபாநாயகரின் நடவடிக்கை சட்டவிரோதமானது இல்லை என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments