நீட் தேர்வைப் புறந்தள்ளப் புதிய சட்டம் இயற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப பரிந்துரை - தமிழக அரசு

0 2346

மருத்துவக்கல்வி சேர்க்கை முறையில் உள்ள பாகுபாட்டால் பாதிக்கப்படும் மாணவர்களின் சமூகநீதி பாதுகாக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

மருத்துவத் துறைக் கொள்கை விளக்கக் குறிப்பில், பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் மீது நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதில், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வைப் புறந்தள்ளுவதற்குப் புதிய சட்டத்தை இயற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயலலாம் எனப் பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களிலும், பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments