சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 88 ஏக்கர் நிலம் வழங்கக் கோரிக்கை: தமிழக முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்

0 2069

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 88 ஏக்கர் நிலத்தை வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார்.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு இதுவரை 5 ஏக்கர் நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 87 ஏக்கர் நிலத்தையும் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோலக் கோவை, தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்கும் தேவையான நிலங்களை விரைவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் இருந்து துபாய், சிங்கப்பூர், கொழும்பு நகரங்களுக்கும், கோவையில் இருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு நகரங்களுக்கும் உடான் திட்டத்தில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments