தாலிபான்களின் பாதுகாவலர் பாகிஸ்தான்: பாக்.உள்துறை அமைச்சர் பேச்சு

0 2613

தாலிபான்களுக்கு பாகிஸ்தான் நீண்டகாலமாக பாதுகாவலாக இருந்து வருகிறது என அந்த நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் ஷேக் ராஷித் என்பவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், தாலிபன்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு உறைவிடம், கல்வி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வந்துள்ளதாக கூறினார்.

காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு அங்கு புதிய அரசை அமைப்பதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும் என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ள நிலையில், தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments