பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி... ஊர்கூடி உரித்த காட்சி..! பரபரப்பு வீடியோ

0 6141
பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி... ஊர்கூடி உரித்த காட்சி..! பரபரப்பு வீடியோ

தஞ்சை பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல், காசாளரை தாக்கியவனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தஞ்சை சாந்த பிள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு புதன்கிழமை இரவு 7 மணியளிவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் பெட்ரோல் போடுவது போல் நடித்து பெட்ரோல் பங்க் ஊழியர் வைத்திருந்த பணப்பையை திருட முயன்றுள்ளனர்.

இதனை அறிந்த ஊழியர் பணத்தை திருட முயன்றவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் வேகமாக வண்டியில் தப்பிச் சென்று விட்டனர். மற்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஒரு இளைஞரை மட்டும் பிடித்தனர். அந்த இளைஞரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வந்த பொதுமக்கள் விரட்டி விரட்டி தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த நபர் என தெரியவந்தது.

இந்நிலையில், அந்த இளைஞன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள் எனக்கூறி, பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தஞ்சை பெட்ரோல் பங்கில் இளைஞருக்கு தர்மஅடி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments