தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு

0 4885
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.

தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments