திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக தாயாருடன் சென்ற மகன்.. திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..

0 4115
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபானி, விருதாச்சலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக தாயாருடன் டாடா இண்டிகா காரில் சென்றுள்ளார்.

வாலிகண்டபுரத்தில் காரின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றியதை அறிந்த தண்டபானி, தனது தாயாரை அழைத்து கொண்டு உடனடியாக காரை விட்டு இறங்கினார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments