தினசரி குடித்துவிட்டு ரகளை செய்த பேரனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாத்தா..

0 4707
கோவையில் தினசரி குடித்துவிட்டு ரகளை செய்த பேரனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக கூறப்படும் தாத்தா கைது செய்யப்பட்டார்.

கோவையில் தினசரி குடித்துவிட்டு ரகளை செய்த பேரனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக கூறப்படும் தாத்தா கைது செய்யப்பட்டார்.

சிவானந்தா காலனியைச் சேர்ந்த 67 வயதான முருகன் என்பவரது மகன் வழிப்பேரன் 26 வயது விஜயராகவன். செவ்வாய்கிழமை காலை உடல்நலக் குறைவால் பேரன் மயங்கிவிட்டதாகக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் முருகன்.

விஜயராகவனை பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவர்கள், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததால் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் விஜயராகவன் வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பேரன் மீது வெறுப்பில் இருந்துள்ளார் முருகன்.

இந்த நிலையில் விஜயராகவனுக்குத் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்யவே, ஒரு பெண்ணின் வாழ்க்கை நாசமாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கூலிப்படையை வைத்து, கொலை செய்தாக முருகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments