வீட்டின் கதவை உள் தாழிட்டு கொண்டு, திறக்கத் தெரியாமல் கதறிய ஒன்றரை வயது குழந்தை பல மணி நேரம் போராடி மீட்பு

0 6405

திண்டுக்கல்லில் கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மீண்டும் திறக்கத் தெரியாமல் கதறிய ஒன்றரை வயது குழந்தையை  5 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

மேங்கில்ஸ்ரோடு பகுதியிலுள்ள கே.எஸ்.ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவகாமி நாதன். வீட்டிலுள்ள அறை ஒன்றில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த இவரது ஒன்றரை வயது குழந்தை ஆஷிவ் அதர்வா, அறைக்கதவை சாத்தியிருக்கிறான்.

தானியங்கி வகை தாழ்ப்பாள் பொருத்தப்பட்டிருந்த அந்தக் கதவு உட்பக்கமாக பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

கதவை திறக்கத் தெரியாமல் குழந்தை வீறிட்டு அழ, அதன் சாவி அறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டதால் வெளியில் இருந்தவர்களாலும் திறக்கமுடியாமல் போய் அவர்களும் துடித்துப் போயினர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஹைட்ராலிக் டோர் ஓபனர் மூலம் நீண்ட போராடி கதவைத் திறந்து குழந்தையை மீட்டனர். குழந்தையின் பாட்டி அவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments