ரெயின் கோர்ட், மாஸ்க் அணிந்து வந்து சிறுவர் சைக்கிளை திருடிய ஆசாமி

0 2201

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே ரெயின் கோர்ட், முகக்கவசம் அணிந்து வந்த ஆசாமி, வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த சிறுவர் சைக்கிளை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.

சூரிய காந்தி தெருவை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் வீட்டு வாசலில், இருசக்கர வாகனம் மற்றும் சிறுவர் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை சைக்கிள் காணாமல் போனதை கண்ட அவர், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில், ரெயின் கோர்ட், முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த டார்ச்சை அடித்து ஏதேனும் பொருள் கிடைக்குமா என நோட்டமிட்ட பின், சிறுவர் சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments