2 மாடிக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் லிப்ட் அவசியம் : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை ஆணை

0 4217

ரண்டு மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை ஆணையிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 2 அடுக்குகளுக்கு மேல் கட்டப்படும் அனைத்து கட்டடங்களிலும் மின் தூக்கிகள், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளுடன் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்துள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments