சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்காவிட்டால் தன்னால் தொகுதிக்கு செல்லவே முடியாது - பேரவையில் உதகை காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சு

0 3939
உதகை மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்காவிட்டால், தொகுதிக்கு தன்னால் செல்லவே முடியாது என பேரவையில் உதகை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் தெரிவித்தார்.

உதகை மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்காவிட்டால், தொகுதிக்கு தன்னால் செல்லவே முடியாது என பேரவையில் உதகை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் தெரிவித்தார்.

வீட்டு வசதி  துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், வாடகை நிலுவை காரணத்திற்காக 1587 கடைகளுக்கு கடந்த 25ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளதாக கூறினார். அதற்கு பதிலளித்துப் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வாடகை உயர்வை எதிர்த்து வியாபாரிகள் நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிமன்றம் நிர்ணயம் செய்த கட்டணத்தையும் செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நகராட்சிக்கு கட்ட வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை சட்டமன்ற உறுப்பினரே வசூலித்து கொடுத்தால் உடனே மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments