கல்லூரிகள் திறந்த முதல் நாளே மாணவர்கள் இடையே வாக்குவாதம் : பச்சையப்பன் - மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே சலசலப்பு

0 4820

சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இருவேறு கல்லூரி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், புறநகர் ரயிலில் கல்லூரி சென்று விட்டு திரும்பிய பச்சையப்பன் - மாநில கல்லூரி மாணவர்கள், கொரட்டூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments