கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க தனியாருக்கு ஆர்வமில்லை.. சுகாதார அமைச்சகம்

0 1534
கடந்த மே மாதம் முதல் கடந்த 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவிகித தடுப்பூசிகளில், சராசரியாக 9 புள்ளி 4 சதவிகித தடுப்பூசி மருந்துகளை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வாங்கியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் அரசு மையங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் 97 சதவிகிதத்தை மக்களுக்கு போட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

ஆந்திரா, மத்திய பிரதேசம், இமாச்சல், பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகள் 2 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுக்கே தடுப்பூசி மருந்துகளை வாங்கின. தமிழ்நாட்டில் 11.65 சதவிகிதம் அளவுக்கு தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி மருந்தை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments