பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பணிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு உறுதி

0 1409

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் மேம்பாலத்தின் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரம் குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்திற்கு பொறியாளர்களின் கவனக்குறைவே முழுக்காரணம் என விளக்கமளித்தார்.

மேலும் விபத்தில் உயிரிழந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments