நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2036

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments