சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்

0 34682

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தென் தமிழகத்தை நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் 393 கோடி  ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதன், இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, மேற்கு மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 336 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments