குடிசை மாற்று வாரியம் இனிமேல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

0 2114

குடிசை வாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வீட்டு வசதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, கலைஞரின் சிந்தையில் உதித்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் பல ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இனிமேல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments