நொய்டாவில் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை குடியிருப்பு... 3 மாதங்களுக்குள் இடித்து தள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 2505

 டெல்லி அருகே உள்ள நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரண்டு 40 மாடி அடுக்கு குடியிருப்புகளை 3 மாதங்களுக்குள் இடித்து தள்ளுமாறு  உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், தவறினால் சம்பந்தப்பட்ட நொய்டா அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பை, சூப்பர்டெக் என்ற நிறுவனம் கட்டியுள்ளது. சுமார் 1000 குடியிருப்புகளும், சில கடைகளும் கட்ட திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நிலையில், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் கட்டிட வரைபடத்தில் மாறுதல் செய்யப்பட்டதாகவும், குடியிருப்புகளை முன்பதிவு செய்தோருக்கு முறையான கட்டிட வரைபடங்கள் காட்டப்படவில்லை எனவும் வழக்கு பதிவானது. 

அது தொடர்பான விசாரணையில், நொய்டா வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுடன் சேர்ந்து சூப்பர்டெக் நிறுவனம் விதிமீறல் செய்ததாக தீர்ப்பளித்த   உச்ச நீதிமன்றம், வீட்டிற்கு முன்பதிவு செய்தவர்களிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments