ஆப்கனை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த கூடாது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம்

0 1496

ஆப்கனை தாலிபன்கள் பிடித்துள்ளதால் இந்தியாவுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காணும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா தலைமையிலான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஆப்கானிஸ்தானை எந்த நாட்டுக்கும் எதிரான தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது, தீவிரவாதிகளின் கூடாரமாக மாற்றக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள ஆப்கனில் லஷ்கரே தொய்பா, ஜெய்ஷே முகம்மது உள்ளிட்ட தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்ற கவலையும் இந்தியா இந்த தீர்மானத்திற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments